Thursday, January 24, 2008

பீமா - பலமில்லை



அப்பாடா.. ஒரு வழியா படம் வந்தாச்சு.. படம் வரதுக்கு முன்னால ஒரே அலம்பல் தான் போங்க.. சரி படம் எப்படி இருக்குனு கேட்டிங்கன்னா, எதிபார்த்த அளவுக்கு இல்லைனுதான் சொல்லணும். படத்துல ரொம்ப முக்கியமான விசயமே க்ளைமாக்ஸ் தாங்க..
படத்துல இருக்க சண்ட காட்சிகள பத்தி ரொம்ப பெருமயா லிங்குசாமி சொன்ன அளவுக்கு இல்லைனாலும், கொஞ்சம் பரவால்ல .. அதுலயும் நம ஹீரோ சேகர என்கவுண்டர் பண்ண வர சண்டைய இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்.
மத்தபடி எல்லா படத்துலயும் வர மாதிரி ஹீரோ ரொம்ப நல்ல ரவுடி (??) அவர் போற போக்குல எல்லாரையும் சுட்டு தள்ளிக்கிட்டு போய்கிடே இருப்பாரு , அவர் சுடுற ஆள் எல்லாரும் கெட்டவங்க அப்படின்னு நாம புரிஞ்சுக்கணும்.
சரி.. நம ஹீரோ மற்றும் கூட்டாளிகள் என்ன தொழில் பண்றாங்க? எப்படி பணம் வருது.. தப்பே செய்யாம தாதாவா இருகாங்க? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல..
அப்புறம் நம்ம திரிஷா வர காட்சிகள் ஏதும் நம்பரமாதிரி இல்ல.. ரவுடினா அம்புட்டு பிரியம்.. ஒரு மிக கடுமையான ரவுடி பின்னால சுத்துறது .. வீட்ட விட்டு வெளிய வருவது எதுவுமே..
ஒரு ரவுடி கேரக்டருக்கு அந்தளவுக்கு உடம்ப மாதுனுமா?? யப்பா விக்ரம் பயமுருதுராரு... ஸ்க்ரீன் புல்லா கூட பத்தல.
சரி இதெல்லாம் வேலைக்காகாது .. இப்படியே படம் எடுத்தா லிங்குசாமி உனக்கு சங்குசாமி னு நெனகும் போதே கதைல சில பல திருப்பம்.
கிளைமாக்ஸ் ல திரிஷா சுடபடுவதும், சேகர் சின்னாவ சுடுவதும் போலீஸ் சேகர சுடுவது எதிர்பார்க்காத திருப்பம்.

பிளஸ்: எதிர்பாக்காத ஏற்றுக்கொள்ள கூடிய கிளைமாக்ஸ்.
மைனஸ்: கிளைமாக்ஸ் அழுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக லாஜிக் கே இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை.

No comments: